அமெரிக்கா - ஈரான் தற்காலிக போர்நிறுத்தம் : உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய எரிபொருள் நெருக்கடி
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
40 நாட்கள் நீடித்த மோதல்களுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே இருவார கால போர்நிறுத்தம் கடந்த புதன்கிழமை காலை நடைமுறைக்கு வந்தது.
2017 முதல் தாக்குதல் திட்டம்! பிள்ளையான் - சுரேஷ் சாலே குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்
அடுத்த ஓரிரு வாரங்களில் எரிபொருள் விலை
இந்த உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம் ஹோர்முஸ் நீரிணைஊடாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் அனுமதிப்பதாகும். அமைதிக்காலத்தில் உலகின் 20 சதவீதமான மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றது.

போர் நிறுத்தம் தொடரும் பட்சத்தில், அடுத்த ஓரிரு வாரங்களில் எரிபொருள் விலைகள் குறையத் தொடங்கலாம் என்று ஒரு வாகனக் குழு தெரிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தின் நீடித்த தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
போர் தொடங்கியதிலிருந்து
அவர்கள் தொடர்ந்தால் "வருத்தத்தை ஏற்படுத்தும் பதிலடி" கொடுக்கப்படும் என தெஹ்ரான் எச்சரித்த நிலையில், "உண்மையான" போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் கடைபிடிக்கும் வரை தனது நாட்டுப் படைகள் அப்பகுதியில் நிலைத்திருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, மொத்த எண்ணெய் விலைகள் 35 சதவீதம் உயர்ந்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலில் கச்சா எண்ணெய் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், அதன் விலை ஒரு காருக்கு எரிபொருள் நிரப்பும் செலவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிரிட்டனின் வாகனக் குழுவான RACஇன் தரவுகளின்படி, வியாழக்கிழமையன்று சராசரி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 158.03 பென்ஸாகவும், டீசல் விலை 191.11 பென்ஸாகவும் இருந்தது.