ஒபெக்+ அமைப்பின் உற்பத்தி அதிகரிப்பு முடிவால் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி மசகு எண்ணெய் உற்பத்தியை மேலும் 1,88,000 பேரல்களாக உயர்த்த ஒபெக்+ கூட்டமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் ஏற்றுமதி
ஹோர்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் ஏற்றுமதி படிப்படியாக மீண்டு வரும் நிலையில், இந்த உற்பத்தி அதிகரிப்பு அறிவிப்பு வெளியானதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை திங்கட்கிழமை சரிவைக் கண்டுள்ளது.

இதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை 41 காசுகள் (0.57%) குறைந்து ஒரு பெரல் 71.71 டொலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 37 காசுகள் (0.54%) சரிந்து ஒரு பெரல் 68.32 டொலராகவும் வர்த்தகமானது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடப் போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக கடந்த சில வாரங்களாக மசகு எண்ணெய் உற்பத்தி இலக்குகள் காகித அளவில் மட்டுமே இருந்தன.
தற்போது வளைகுடா நாடுகளின் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 3 மில்லியன் பெரரல்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ள போதிலும், இது போருக்கு முந்தைய அளவை விட இன்னும் 40வீதம் குறைவாகவே உள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவின் யாரோஸ்லாவ் மற்றும் லெனின்கிராட் பிராந்தியங்களில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 6 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam