எரிபொருள் விலை உயர்வு குறித்து ட்ரம்பின் முக்கிய அறிவிப்பு
எரிபொருள் விலை உயர்வு குறுகிய காலமே நீடிக்கும். ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை இட்டு இதனை விளக்கியுள்ளார்.
போர் நிறுத்தம்
அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அமெரிக்காவும் உலகமும் செய்ய வேண்டியது ஒரு சிறிய நிதித் தியாகம் மட்டுமே. இதைப் பற்றி வேறுவிதமாகச் சிந்திப்பவர்கள் முட்டாள்கள் மட்டுமே" என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் தொடரும் வரை, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க இடமில்லை என்று ஈரான் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்