கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடிப்பு!
கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் எரிபொருள் பெருமளவு கடலில் கலந்துள்ளதாக இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (Marine Environment Protection Authority - MEPA) தெரிவித்துள்ளது.
இன்று (14.12.2025) அதிகாலை 3.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கு பகுதியில் ஆழ் கடலில் பொற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்கு எண்ணெய்க் கப்பல்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கும் குழாயிலேயே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட விதம்

ஆழ்கடலில் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையால் அதிரடியாக மூடப்பட்டு,எண்ணெய் கசிவது நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக அதிகாரசபை-கடலோர பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படைகள்-பொற்றோலியம் கூட்டுத்தாபனம் ஆகிய இணைந்து கசிந்த அநேக எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது.
வீசப்பட்டிருக்கும் மிகுதி எண்ணெய்யை எடுப்பதற்கு தொழில்நுட்ப செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்த உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam