எரிபொருள் விநியோகம் தொடர்பில் பரவும் செய்தி! சற்றுமுன்னர் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis QR Code
By Dhayani Mar 20, 2026 09:07 AM GMT
Report

புதிய இணைப்பு

நாளை மற்றும் நாளை மறுநாள் விநியோகஸ்தர்களுக்கு வழமைப்போன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும்,நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாது என பரவும் செய்திகளில் உண்மையில்லை என்றும் மெறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து இயங்கும் என்றும், இந்த சனிக்கிழமை இரவு கியூஆர் குறியீடு (QR code) மீட்டமைக்கப்படும் என்றும் அவர் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர்  மயூர நெத்திகுமாரகே  தெரிவித்துள்ளார்.

மேலும், தேவை ஏற்பட்டால் ஞாயிற்றுக்கிழமையன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படலாம் என்றும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அடுத்த மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு தற்போது உள்ளது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே கூறியுள்ளார்.

உலக முடிவு பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

உலக முடிவு பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

எரிபொருள் விநியோகம்

இருப்பினும், நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயல்பாட்டிற்கு வசதியாகப் போதுமான கையிருப்பை ஆர்டர் செய்யும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பரவும் செய்தி! சற்றுமுன்னர் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல் | Oil Corporation Fuel Distribution Announcement

அதன்படி, எரிபொருள் ஆர்டர் செய்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தடுக்கும் வகையில், முந்தைய நாளே ஆர்டர்கள் பிரிவிற்கோ அல்லது கையிருப்பு முனையத்திற்கோ உரிய காசோலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகம் ஒரு அத்தியாவசிய சேவையாகத் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனப்பதிவு எண்

இதற்கிடையில், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பரவும் செய்தி! சற்றுமுன்னர் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல் | Oil Corporation Fuel Distribution Announcement

இன்று இரட்டை இலக்க நாள் என்பதால், வாகனப் பதிவு எண்ணில் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்கள் மட்டுமே எரிபொருளைப் பெற முடியும்.

இருப்பினும், கியூஆர் குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும், சில வாகன உரிமையாளர்களால் ஒருமுறை கூட எரிபொருளைப் பெற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்ப வருபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

எரிபொருள் நிரப்ப வருபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)

மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US