உக்ரைன் ரஷ்ய மோதலில் எதிரொலி! எரிபொருள், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலக சந்தையில் பாரிய மாற்றங்கள் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பல நாடுகளில் பங்கு பரிவர்த்தனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், தங்கம் மற்றும் எரிபொருளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது 105.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் WTI எண்ணெய் ஒரு பீப்பாய் 100.54 டொலராக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலேயே இதுவே அதிகபட்ச எண்ணெய் விலையாகும்.
இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 131,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 19,800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை மூன்றாம் யுத்தத்திற்கான ஆரம்பம் என வர்ணிக்கப்படும் ரஷ்ய - உக்ரேன் மோதலை அடுத்து உலக பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன எச்சரித்துள்ளன.