அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய உத்தியோகத்தர்கள்: கடும் விமர்சனம் வெளியிட்ட மக்கள்
முல்லைத்தீவு - மல்லாவியில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நில அளவை திணைக்களத்தினுடைய குறித்த வாகனம் நேற்று (22.09.2023) மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் மதுபானங்கள் பெற்று செல்வதை அவதானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் விமர்சனம்
ஒரு அரச திணைக்களத்திற்குரிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி இவ்வாறு மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி மதுபானம் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் மல்லாவி பொலிஸ் உயர் பொறுப்பதிகாரியிடம் சென்று இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தையும், சாரதியையும் கைது செய்யுமாறு மக்கள் கோரிய போது அவ்வாறு கைது செய்வதற்கு தங்களால் முடியாது என பொலிஸார் மறுத்திருத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வாகனம் அவ்விடத்தில் நிற்பதனை ஒளிப்பதிவு செய்வதனை கண்டு அவர்கள் உடனடியாக அவ் இடத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.
பின்னர் சிறிது நேரம் தாமதித்து குறித்த மதுபானசாலைக்கு மீண்டும் வந்து மதுபானங்களை பெற்றுக்கொண்டு சென்றிருந்தது மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு பொலிஸாரின் குறித்த செயற்பாடு தொடர்பிலும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
