ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்
மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகளை உள்ளடக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதியால் (28) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் ஒவ்வொரு உரிமதாரரும் உரிய திகதியில் அல்லது அதற்கு முன் வரி செலுத்த வேண்டும் என்று இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உரிமம் இடைநிறுத்தம்
அதன்படி, உரிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் வரி அல்லது கட்டணத்தை முழுமையாக செலுத்தத் தவறிய உரிமதாரரின் உரிமம் இடைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் முன்னர் செயல்படுத்தப்படவில்லை என்றும், இது ஒரு புதிய சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் என்றும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் உரிய திகதியிலிருந்து 90 நாட்களுக்கு மேல் வரி மற்றும் கட்டணம் முழுமையாக செலுத்தப்படாவிட்டால் உரிமதாரர்களின் அனைத்து உரிமங்களையும் இடைநிறுத்துவதாக புதிய வர்த்தமானி அறிவித்துள்ளது.

புதிய வரி செலுத்தும் காலம்
உரிமம் இடைநிறுத்த காலத்தை 6 மாதங்களாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் வரி ஏய்ப்பைக் குறைக்கும் நோக்கில் இந்தப் புதிய வரி செலுத்தும் காலத்தை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |