பொலிஸ் அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதிகளில் கட்டுப்பாடு
பொலிஸ் அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதிகளை ஐந்து வருடங்கள் வரை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கறுவாத்தோட்டம், ஹெவ்லொக் டவுண் போன்ற இடங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளில் குடியிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் பெரும்பாலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே குறித்த குடியிருப்புகளை காலி செய்கின்றனர்.
சுற்றுநிருபத்தின் நோக்கம்
இந்நிலையில் அவ்வாறான குடியிருப்பு ஒன்றில் பொலிஸ் அதிகாரியொருவர் குடியிருக்கும் கால எல்லையை ஐந்து வருடங்களாக மட்டுப்படுத்தி பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் மூலம் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் தங்கள் பிள்ளைகளை உயர் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்தச் சுற்றுநிருபத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan