இலங்கையின் மிகப் பழைமையான ஹோட்டலில் உணவருந்தியவர்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதி!
இலங்கையின் மிகப் பழைமையான ஐந்து நட்சத்திர ஹோட்டலான கோல்பேஸ் ஹோட்டலில் தரமற்றதும் சுகாதாரச் சீர்கேடானதுமான உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோல்பேஸ் ஹோட்டலில் அண்மைக்காலமாக உணவு உட்கொண்டவர்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகள் மற்றும் வியாதிகளை எதிர்கொண்டிருந்தனர்.
திடீர் பரிசோதனை
அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஹோட்டலின் உணவின் தரம் குறித்து பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், ஹோட்டலின் தரப்படுத்தல் (ரேட்டிங்) வீழ்ச்சியுறத் தொடங்கியிருந்தது.

இந்நிலையில் கொழும்பு மாநகர சபை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் ஹோட்டலின் சமையலறை சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து சமையலறையின் ஒருபகுதியை மூடுமாறு ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் ஹோட்டல் நிர்வாகம், கொழும்பு மாநகர சபை சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டதன் காரணமாக ஹோட்டலின் சமையலறை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri