சம்பிக்க ரணவக்கவை சிக்க வைக்க இலஞ்ச ஆணைக்குழு ஊடாக வலை விரிக்கும் அதிகாரிகள்?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு ஊடாக விசாரணையொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
பெருநகரம் மற்றும் மேல் மாகா அபிவிருத்தி அமைச்சின் பிரசார திட்டங்களின் மூலம் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணை ஒன்றை நடத்தியது.
இந்நிலையில்,சம்பிக்க ரணவக்கவை அழைத்து அண்மையில் வாக்குமூலமும் பெறப்பட்டது.
எனினும் இந்த விசாரணைகள் மூலம் சம்பிக்க ரணவக்கவை சிக்க வைக்க போதிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை என்பதால், இலஞ்ச ஆணைக்குழு ஊடாக மற்றுமொரு வலையை விரிக்க அதிகாரிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri