வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது
கம்பஹா - மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிற்றூந்து மற்றும் இரு உந்துருளிகளில் பயணித்த சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் 2 கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதாள உலக நபர்
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஹீனடியன மகேஸ் என்ற பாதாள உலக நபரின் அறிவுறுத்தலின் பேரில், மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாம் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
ஹீனடியனா மகேஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி வர்த்தகர்களை இலக்கு வைத்து கப்பம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
