இலங்கையில் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் கடந்த 14 மாதங்களில் 157வீதத்தால் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த ஆகஸ்ட் 10, 2022 முதல் நூற்றி ஐம்பத்தேழு வீதத்தால் (157%) மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் மின்சார கட்டணம் 75%, பெப்ரவரி 15, 2023 இல் 66.2% மற்றும் கடந்த 20 ஆம் திகதி 18% ஆல் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
எனினும், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம் 14.12 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி பதினான்கு மாதங்களில் 157% ஆல் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் சட்டத்தின் 5 மற்றும் 30 பிரிவுகளின்படி, மின் கட்டணத் திருத்தம் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஒரு வருடத்தில் இரண்டு முறை செய்யப்படலாம், ஆனால் சட்டத்திற்கு மாறாக மூன்றாவது முறையாக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,