சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிகாரிக்கு அச்சுறுத்தல்- செய்திகளின் தொகுப்பு
கிளிநொச்சி- கண்டாவளை கனகராயன் ஆற்றுப் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுக்க சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அங்கிருந்தவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதேச செயலருக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு பிரதேச செயலாளர் நேரடியாக சென்றுள்ளார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு கனரக வாகனங்களை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நான்கு கனரக வாகனங்கள் அதிகாரிகளை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,