ஐரோப்பிய நாடொன்றில் புகலிடம் கோரியுள்ள இலங்கையின் உயர்மட்ட அரச அதிகாரி
இலங்கையின் உயர் மட்ட அரச அதிகாரி ஒருவர் வெளிநாடொன்றில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய விஜயத்தை மேற்கொண்ட போது அவர் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்படக்கூடிய உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாகக் குறிப்பிட்டு, அவர் இவ்வாறு புகலிடம் கோரியுள்ளார்.
அரசியல் புகலிடம்
அதற்கமைய, ஐரோப்பாவின் முக்கிய நாடு ஒன்றில் அரசியல் புகலிடம் கோரி அவர் விண்ணப்பப் படிவத்தையும் சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளவர், இக்காலகட்டத்தில் அடிக்கடிப் பேசப்படும் அரச நிறுவனம் ஒன்றின் பிரதானி என செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் எந்தவொரு தருணத்திலும் தனது குடும்பத்துடன் குறித்த நாட்டிற்கு செல்லக்கூடிய வகையில் 5 வருடங்கள் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரமும் அவருக்குக் கிடைக்கவுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
you may like this video