எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு காத்திருக்கும் நிவாரணம்.!
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு சர்வதேச ரீதியில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு ஆகியவையே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் நிலவும் ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான டொலர் கையிருப்பு நாட்டில் இல்லாத நிலையில், தற்போதைய அரசாங்கத்திடம் டொலர் கையிருப்பு காணப்படுகின்ற போதிலும் சர்வதேச நெருக்கடிகளால் எரிபொருளைக் கொண்டுவருவதில் சிக்கல்கள் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், பெட்ரோலுக்கு 70 ரூபாவும் மானியமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், முன்னர் குறிப்பிடப்பட்ட எரிபொருள் விலைகளும் அக்கால சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்ததாகக் கூறியுள்ளார்.
அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இதன் மூலம் நாடாளுமன்ற நேரமும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிக்குறைப்புகள் மற்றும் மக்களுக்கான நிவாரணங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri