இலங்கையில் வெடிக்கப்போகும் அக்டோபர் புரட்சி: ஹிருணிகா பிரேமச்சந்திர - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் அடுத்த மாதம் மீண்டும் பாரியதொரு மக்கள் புரட்சி வெடிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் ஒன்று கூடலை தவிர்ப்பதற்காக பல வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது அடுத்த மாதம் ஏற்படவுள்ள மக்கள் எழுச்சியை எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலாலும் கட்டுப்படுத்த முடியாதென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
