39 ஆண்டுகள் கடந்தும் நினைவில் திலீபன் - தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் அனுஷ்டிப்பு தமிழர் பகுதிகளில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய, முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் நேற்று(26.09.2026) பிலக்குடியிருப்பு பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
நினைவு தினம் அனுஷ்டிப்பு
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு திலீபனின் நினைவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அத்துடன், குறித்த நிகழ்வில் அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
