இலண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழீழத் தேசியக் கொடி நாள் அனுஷ்டிப்பு
தமிழீழத் தேசியக் கொடி நாள் இலண்டனில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(22.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியத்தின் அடையாளம், வரலாறு, பாரம்பரியம் மற்றும் தமிழர் என்ற பெருமையைப் போற்றும் வகையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழத் தேசியக் கொடி நாள் அனுஷ்டிப்பு
தேசியக் கொடியின் பெருமையையும், தமிழர் ஒற்றுமையும், தமிழ் தேசியத்தின் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) நாடாளுமன்றத்தால் நவம்பர் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக் கொடி நாளாக 2021 ஆம் ஆண்டு முதல் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும், பல்வேறு நாடுகளிலும் இடங்களிலும் நவம்பர் இறுதி வாரங்களில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புலிக்கொடி, நவம்பர் 27, 1990 அன்று நடைபெற்ற இரண்டாவது மாவீரர் நாளில் தமிழீழத் தேசியக் கொடியாக அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டு, நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

