அழகியல் பாட செய்முறை பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 2026 அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு மாற்று திகதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அழகியல் பாட செய்முறை பரீட்சை இடம்பெறுகின்றது.
அனர்த்த நிலைமை காரணமாக பரீட்சைக்கு மாணவர்களால் செல்ல முடியாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று (27) அறிவித்துள்ளது.
மாற்று திகதி
தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த செய்முறை பரீட்சைக்கான வேறு ஒரு தினத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே வெள்ள நிலைமை காரணமாக மாணவர்கள் தமது செய்முறைப் பரீட்சைக்குச் சமூகளிக்க முடியாமல் போனாலும் அச்சமடைய தேவையில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri