வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு(Video)
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன.
புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலப்பனை, குருதுஓயே பகுதியில் உள்ள புதையல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறும் பகுதியென கருதப்படும், குழியொன்றில் இருந்தே - 61 வயதான அபேசிங்க பண்டா மற்றும் 30 வயதான ருவான் குமார ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு

இருவரும் நேற்று முன்தினம் வீடு திரும்பாத நிலையில், அது தொடர்பில் உறவினர்கள் வலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் விசாரணையின்போதே, சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழிக்குள் இருந்து தண்ணீர் மோட்டார் இயந்திரமும், குழிக்கு வெளியே இருந்து
ஜெனடேட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.






உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan