நுவரெலியா - சீதையம்மன் ஆலயத்திற்கு சிறப்பு நினைவு அட்டை (video)
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா நகருக்கு அருகில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்திற்கான சிறப்பு நினைவு அட்டை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நினைவு அட்டையை நேற்றைய தினம் (23.04.2023) பிரதமர் தினேஷ் குணவர்த்தன வெளியிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இராமாயண புகழ் அசோகவனத் தளத்தில் தியான மையத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டியுள்ளார்.
இராவணன் - சீதை
பிரதமர் குணவர்தனவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் உட்பட்ட ஏனைய முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அசோகவனம் என்பது இதிகாசமான இராமாயணத்தில் இராவணன் சீதையைச் சிறைபிடித்து வைத்திருந்ததாக நம்பப்படும் இடமாகும்.
இந்தநிலையில், இந்த இடத்துக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.