நுவரெலியா மற்றும் ராகலை வரை புதிய தொடருந்து பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும்: பந்துல குணவர்தன (video)
நானுஓயா தொடருந்து நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய தொடருந்து பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடருந்து சேவை தேவையாக உள்ளது.
தொடருந்து சேவை
எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா - கந்தபளை தொடருந்து நிலையத்துக்கிடையில் தொடருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக புதிய தொடருந்து பாதையும் நிர்மாணிக்கப்படும். நுவரெலியாவில் இருந்து கொழும்புவரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
