நுவரெலியாவில் குடைசாய்ந்த லொறி : நால்வருக்கு காயம்
நுவரெலியாவில் (Nuwara Eliya) தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் இருந்து பீட்ரு தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்துள்ளது.

முன்னோக்கி சென்ற லொறியில் தடுப்புக்கட்டை (பிரேக்) திடீரென செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri