நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம்
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கனரக வானம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி (பிரேக்) செயலிழந்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹக்கல தாவரவியல் பூங்கா அருகாமையில் வீதியோரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருடனும் கனரக வாகனத்திற்கு முன்பாக சென்றுக் கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப்புடனும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும் விபத்து ஏற்பட்ட இடமானது இறுதியில் திட்வா (Ditwah) சூறாவளி காரணமாக ஹக்கல பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் விபத்து ஏற்பட்டமையால் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவித்த இடத்தில் போக்குவரத்து நேரிசல் அடிக்கடி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்






அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!