நுவரெலியா நெடுங்குடியிருப்பு தீ விபத்து: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடவடிக்கை (Photos)

Nuwara Eliya Sri Lankan Peoples Central Province
By Thirumal Jul 06, 2023 02:22 PM GMT
Report

நுவரெலியா - இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

நுவரெலியா நெடுங்குடியிருப்பு தீ விபத்து: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடவடிக்கை (Photos) | Nuwara Eliya Fire Accident Solution To People

இதற்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் ஆலோசனைக்கமையவும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தங்குமிட ஏற்பாடுகள்

அத்தோடு, தோட்ட நிர்வாகத்துடனும் தொடர்புகொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் மேலதிக தேவைப்பாடுகளை அறிவதற்காகவும், மாற்று தங்குமிட ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் இன்று (06.07.2023) பாதிக்கப்பட்ட தோட்டத்துக்கு சென்றிருந்தார்.

நுவரெலியா நெடுங்குடியிருப்பு தீ விபத்து: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடவடிக்கை (Photos) | Nuwara Eliya Fire Accident Solution To People

பாதிப்புக்குள்ளான மக்களுடன் கலந்துரையாடிய அவர், ஆறுதல் கூறியதுடன், அமைச்சரால் வழங்கப்பட்ட தகவல்களையும் பரிமாற்றிக்கொண்டார்.

மேலும், அவர்களுக்கு தேவையான மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தேவையான வசதிகளையும் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW     


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US