நுவரெலியா - இராகலை குடியிருப்பில் தீ விபத்து: மக்கள் நிர்க்கதி (Video)
நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை கீழ்பிரிவின் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 20 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்தானது இன்று (05.07.2023) காலை 10.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குறித்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருட் சேதங்கள்
தோட்டத்தில் ஆறாம் இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இத்தீ விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும் பெருமளவில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்றும் ஒரு சில பொருட்கள் மாத்திரமே பாதுகாக்க கூடியதாக இருந்தது என மக்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட வைத்தியசாலையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
