பிலிப்பைன்ஸை தாக்கும் கொடூரப் புயல் : 100இற்கும் மேற்பட்டோர் பலி
பிலிப்பைன்ஸைத் தாக்கிய 'கல்மேகி' புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு
'கல்மேகி' என்ற புயல், அப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான 'செபு' நகரை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
Philippine President Ferdinand Marcos Jr. declared a state of emergency on Thursday after Typhoon Kalmaegi left at least 114 people dead and hundreds missing in central provinces in the deadliest natural disaster to hit the Philippines this year.
— AZ Intel (@AZ_Intel_) November 6, 2025
pic.twitter.com/f9XFBQ6Ozb
இதனால் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 127 பேர் காணாமல் போயுள்ளனர், 82 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரும்பாலான இறப்புகள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் இன்று (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூறாவளி காரணமாக தாய்லாந்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |