கார் விபத்து! ஐவர் வைத்தியசாலையில்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து சம்பவம் இன்று (05.11.2022) காலை நேர்ந்துள்ளது.
விபத்தில் சாரதி உட்பட 5 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐவர் வைத்தியசாலையில்
கொழும்பு- மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பேருந்து விபத்து! யாழ். பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு - வெளியான தகவல்கள் |
வவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு - 16 பேர் படுகாயம் (Video) |





உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
