கந்தபளையில் விபத்துக்குள்ளான வாகனம்! ஒருவர் பலி
நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தபளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (08) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மரக்கறி ஏற்றச் சென்ற வாகனம்
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan