போராட்டத்தை தவிர்த்து கடமையில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் இன்றைய தினம்(27) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடாத நிலையில் தமது கடமையை முன்னெடுத்துள்ளனர்.
வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை(27) மதியம் நாடு பூராகவும் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியர்கள் போராட்டம்
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு குறைக்க பட்டுள்ளதாகவும், தாதியர்களின் பதவி உயர்வு காலம் நீடிக்க பட்டுள்ளமை சுகாதார ஊழியர்களை முழுமையான பாதித் துள்ளதாகவும் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப் பட்டதாக தெரிவித்து இன்று வியாழக்கிழமை (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது தாதியர்கள் தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியைப் பெற்றுக் கொடு, குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வை பழைய முறைப்படி வழங்கு, ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் இன்றைய தினம் (27) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடு படாத நிலையில் தமது கடமையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
