பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்: தாதி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான தாதி ஒருவருக்கு 9 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவின் வீட்ஸ் பகுதியில் நடந்துள்ளது.
27 வயது ரோமீசா அஹமட் என்ற தாதி, தனது இரவுப்பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, இந்தியாவை சேர்ந்த 28 வயது ஆதிரா அனில்குமார் என்பவரே உயிரிழந்தார்.
துரதிஷ்டவசமான சம்பவம்
குழந்தை ஒன்றின் தாயான ஆதிரா அனில்குமார், இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்த சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ரோமீசா அஹமட், மணிக்கு 40 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 60 மைல் வேகத்தில் பயணித்ததோடு வாகனம் செலுத்தும் போது தனது அலைபேசியையும் பாவித்துள்ளார்.
இதேவேளை, ஆதிரா அனில்குமார் Leeds-Beckett பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காக இணைய முடிவெடுத்திருந்த நிலையில் இந்த துரதிஷ்டவசமாக சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
