மீண்டும் மின்சார நெருக்கடியா? நுரைச்சோலை மின்சார மையத்தின் மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்தது.
நுரைச்சோலை லக்விஜய மின்சார மையத்தின் 3வது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.
இந்த மின்பிறப்பாக்கி நேற்றைய தினமே திருத்தப்பட்டு, உற்பத்தி செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
எனினும் இன்று அது மீண்டும் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின்சார அலகுகளில் 270 மெகாவோட்ஸ் அலகுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை நுரைச்சோலை மின்சார மையத்தின் இந்த மூன்றாவது மின்பிறப்பாக்கி தமது செயற்பாடுகளை ஆரம்பித்த நிலையில், மின்சார விநியோகத் தடை மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.
இந்தநிலையில் தற்போது குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ள போதிலும் தமது அறிவித்தலை ஆணைக்குழு இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri