இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பதிவான மாற்றம்
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 840,000 இற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 840,411ஆக காணப்படுகிறது.
அதிலும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் எண்ணிக்கை 176,465ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை
இதனைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதேநேரம், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 22ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 99,777 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri