நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை - இன்றும் புதிதாக 10 கண்டுபிடிப்பு
செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.
இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
8 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு
இதன்போது, 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில், 08 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.



பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 18 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri