இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை கடக்கலாம்!
கோவிட்-19 நோயாளர்கள் பதிவாகின்றதை அவதானிக்கையில், 100 நாட்களை அடையும்போது, தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை விடவும் அதிகரிக்கக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சாதாரண கணக்கெடுப்பின்படி, ஐந்து, ஆறு தினங்களுக்கிடையே, ஒரு நபர், இரண்டு நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவராயின், ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறையும், நோயாளர்களின் எண்ணிக்கை இருமடங்காகும்.
அவ்வாறு ஏற்பட்டால், 100 நாட்கள் என்ற காலம் நிறைவடையும் போது, 20 தடவைகளுக்கு இந்த எண்ணிக்கை இருமடங்கானால், நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் 2,478 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 147,680 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1015 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
