அரசுக்கு எதிரான நுகேகொடைப் பேரணி : ரவிக்கு இன்னும் அழைப்பு வரவில்லையாம்...
அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தனக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக ரவி கருணாநாயக்க நாடாளுமன்றம் வந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராகவே
அந்தக் கட்சியின் உரித்து ரவி கருணாநாயக்க வசம் இருப்பதால் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றைத் தனதாக்கிக்கொண்டார்.

இதனால் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உள்ளக மோதல் ஏற்பட்டது.
எனினும், ரவி கருணாநாயக்க தன்னை இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராகவே அடையாளப்படுத்தி வருகின்றார். ஆனால், கட்சிக்குள் உள்ள சிலர் தனக்கு எதிராகச் சதி செய்கின்றனர் எனவும், உள்ளகக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசுக்கு எதிரான நுகேகொடைப் பேரணிக்கு என்னை அழைக்காவிட்டாலும், எதிரணிகள் செல்ல வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |