ஈரான் - அமெரிக்கா இடையே அணுசக்தி அமைதி ஒப்பந்தம்!
ஈரானுடன் சரிபார்க்கப்பட்ட அணுசக்தி அமைதி ஒப்பந்தத்தை தாம் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்பில் அந்நாட்டு ஜனாதிபதி பெஷேஷ்கியன் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை சரிபார்ப்பது எளிது என்று ஈரான் ஜனாதிபதி குறித்த சந்திப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஈரான் அணு ஆயுதம்
ஈரான் அணு ஆயுதத்தை நாடவில்லை என்றும், ஏனெனில் அப்பாவி மக்களை பெருமளவில் கொல்வது இஸ்லாமிய குடியரசின் கோட்பாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது, எனவும் பெஷேஷ்கியன் விளக்கமளித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ட்ரம்ப் தனது முந்தைய பதவிக் காலத்தில் , உலக வல்லரசுகளுடனான ஈரானின் “2015 அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார்.
இந்தக் கடுமையான நடவடிக்கை ஈரான் ஒப்பந்தத்தின் அணுசக்தி வரம்புகளை மீறத் தூண்டியதாக கூறப்படுகிறது.
சர்ச்சைகளைத் தீர்க்க அமெரிக்க இராஜதந்திரத்திற்கு மற்றொரு வாய்ப்பை வழங்க ஈரான் தயாராக இருப்பதாகக் ஈரான் தரப்பு கூறியதை தொடர்ந்து பெஷேஷ்கியனின் கருத்துக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |