அரச சொத்துக்களை மீட்டெடுக்கும் அநுர அரசின் திட்டம்: நிலாந்தி எடுத்துரைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகரான மறைக்கப்பட்டுள்ள அரச சொத்துக்களை மீட்டெடுக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை ராஜபக்சவினர் மீண்டும் கொண்டு வந்ததாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று(14.10.2024) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் ஆட்சியினர் தனது சொந்த நாட்டில் அல்லது வேறு நாடுகளில் சட்டவிரோதமாக மக்களின் பணத்தை முதலீடு செய்திருந்தால், அதை மீட்டெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உகாண்டாவில் உள்ள பணம்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உகாண்டாவில் இருந்து பணத்தைத் திரும்பக் கொண்டுவர விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, “தாமஸ் டிலாரோ உகாண்டாவிற்கு சட்டப்பூர்வமாக பணம் அச்சடித்ததைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியும்” என அவர் கூறியுள்ளார்.

மேலும், முந்தைய அரசாங்கத்தினர், மக்களின் நிதிச் சொத்துக்களை எந்த நாட்டில் முதலீடு செய்து மறைத்து வைத்தாலும் அவற்றை சட்டப்பூர்வமாக பெறுவதற்கு இருமுறை யோசிக்க தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri