யாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்ட விவகாரம் : இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். நகரின் மத்தியில், கஸ்தூரியார் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாகி இருந்த நிலை
தாக்குதலுக்கு இலக்கானவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை , பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து, ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு, தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதல் தொடர்பிலான காணொளி காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் தாக்குதலாளிகளை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
ஓட்டுமடம் மற்றும் தாவடி பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
