நிலக்கரி கப்பல் விவகாரத்தில் யாருக்காவது வழக்கு பதிவாகியுள்ளதா..! டி.வி. சானக்க கேள்வி
இலங்கைக்கு வந்த 19 நிலக்கரி கப்பல்கள் ஒப்பந்தங்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அது தொடர்பாக இதுவரை ஒரேயொரு வழக்கேனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் 13 முறைப்பாடுகளும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்றும் அவர் வினவினார்.
களுத்துறையில் நடைபெற்ற "நீதிக்காக எழுந்திருப்போம்" விசேட கருத்தரங்குத் தொடரின் ஆரம்பக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதி எங்கே இருக்கிறது?
"முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடியகொடி சட்டத்திற்கு மேலானவரா? அனுர குமார திஸாநாயக்க சட்டத்திற்கு மேலானவரா? திசைகாட்டி சட்டத்திற்கு மேலானதா? அப்படியாயின் இங்கு நீதி எங்கே இருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களை ஏமாற்றிய இந்த அரசாங்கம் இன்று பெருமளவில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இப்போது நிலவும் வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்யப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் மீது ஏன் வழக்குகள் தொடரப்படுவதில்லை என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீனம் என்பது இதுவே
சட்டத்தின் சுயாதீனம் என்பது எதிர்க்கட்சியினர் மீது மட்டும் வழக்கு போடுவது அல்ல. நீதி என்பது எதிர்க்கட்சி தவறு செய்தால் அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும், அரசாங்கம் தவறு செய்தால் அரசாங்கத்தின் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும் என சானக வலியுறுத்தியுள்ளார்.
மாறாக, எதிர்க்கட்சி தவறு செய்யாத போதும் வழக்குகள் தொடரப்பட்டு, அரசாங்கத்தின் தவறுகளுக்கு வழக்குகள் தொடரப்படவில்லை என்றால் அங்கு நீதி இருக்கிறதா? அங்கு எந்தவொரு நீதியும் இல்லை" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri