தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
2024 பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் நேற்றுடன் (11.10.2024) நிறைவடைந்தன.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேசிய பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் பட்டியல்
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் பட்டியலில், 1. ஜே.வி.பி அரசியல் பீட உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, 2. பேராசிரியர் வசந்த சுபசிங்க சமூகவியல் துறை, களனி பல்கலைக்கழகம், 3. கலாநிதி அனுர கருணாதிலக்க களனிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், 04. பேராசிரியர் உபாலி பன்னிலகே ருஹுணு பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி, 05. எரங்க உதேஷ் வீரரத்ன நிறுவனத்தின் CEO, IT பொறியாளர், 06. அருணா ஜெயசேகர ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் 07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, 08. ஜனித ருவன் கொடிதுவக்கு உதவி கடற்படை பொறியாளர், 09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி பொறியாளர், 10. ராமலிங்கம் கே.சந்திரசேகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 11. கலாநிதி நஜித் இந்திக்க சமூக ஆர்வலர், 12. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர், சுகத் திலகரத்ன ஒலிம்பிக் விளையாட்டு வீரர் 13. லக்மாலி ஹேமச்சந்திர – சட்டத்தரணி, 14. சுனில் குமார கமகே பட்டய கணக்காளர், 15. காமினி ரத்நாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி, 17. சுகத் வசந்த டி சில்வா ஓய்வு பெற்ற சமூக சேவை அதிகாரி 18. கீர்த்தி வெலிசரகே விருது பெற்ற எழுத்தாளர், 19. சமிலா குமுது பீரிஸ் பிரபல நடிகை 20. அப்துல் ஃபதா முகமது இக்ராம் ‘எமரால்ட் ’ என்ற ஆடை பிராண்டின் நிர்வாக இயக்குநர் 21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா மின்சார தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், 22. முகமது நசீர் இக்ராம் ஆசிரியர் தொழில், 23. மார்ட்டின் நெல்சன் மூத்த நாடக கலைஞர், 24. ரொமேஷ் மோகன் டி மெல் நிறுவன இயக்குனர் 25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்திரி நிறுவன இயக்குனர் 26. புபுது நுவன் சமரவீர கால்நடை மருத்துவர், அவுஸ்திரேலியா ஒருங்கிணைப்பாளர் 27. சரத் லால் பெரேரா அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளர், 28. அனுர ஹெட்டிகொட கமகே கணக்காளர், கட்டார் அமைப்பாளர் 29. ஹேமதிலக கமகே ஊடகவியலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |