மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது.
இதுவரை வெளியான களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தி 76 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி வெறும் 11 வீத தபால் வாக்குகளையே குறித்த மூன்று மாவட்டங்களிலும் பெற்றுக் கொண்டுள்ளது.
ரணில் பின்னடைவு
முன்னாள் ஜனாதிபதி ரணில்(Ranil Wickremesinghe) ஆதரவு அணியான புதிய ஜனநாயக முன்னணி 5.3 வீத வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் பொதுஜன பெரமுண கட்சியும், ஐந்தாவது இடத்தில் திலித் ஜயவீரவின் சர்வஜன அதிகாரக் கட்சியும் உள்ளன.
தற்போதைய நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையிலான மக்கள் போராட்ட அமைப்பு ஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
