டீசலின் விலையை 120 ரூபாவினால் குறைத்த அரசாங்கம்: பிரதி அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஓரு லீட்டர் டீசலின் விலையை 120 ரூபாவினால் குறைத்துள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்ட போது ஒரு லீட்டர் டீசலின் விலை 363 ரூபாவாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து டீசலின் விலை இவ்வாறு லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா என்ற அடிப்படையில் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விலை மாற்றம்
எவ்வாறெனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னர் வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 307 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 352 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தங்களின் பெர்து வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 283 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 313 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரதி அமைச்சர் ஒருவர் விலை மாற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சில முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் சில சர்ச்சை கருத்துக்களை வெளியிடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
