யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்கான 100 மில்லியன் ரூபா நிதி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.
ஆரம்பித்து வைப்பு..
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













அட நடிகர் சந்தானம் மகனா இது, சூர்யாவுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ... நல்லா வளர்ந்துட்டாரே... Cineulagam
