சகோதரிக்கு ஆசனம் கோரிய என்பிபி வேட்பாளர்.. மறுத்ததால் போராட்டத்தில் குதிப்பு
தேசிய மக்கள் சக்தி சார்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளரின் சகோதரர் விகிதாசார ஆசனத்தை சகோதரிக்கு தரும்படி கோரியுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு அமைய குறித்த ஆசனம் அவருக்கு வழங்கப்படாமையினால் நேற்றைய தினம் குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தெரிவித்துள்ளார்.
தனிநபர் போராட்டம்
இன்றையதினம் (02.06.2025) கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தொடர்பில் கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், ”சகோதரிக்கு ஆசனம் கேட்டு கிடைக்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி ஊழல் என்ற பொய்யான கருத்துக்களை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமை அதற்காக பொய்யான தகவல்களை முன்வைக்க முடியாது. அவருடைய சகோதரிக்கு ஆசனம் அவரால் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் கொள்கைக்கு அமைய ஆசனம் வழங்க முடியவில்லை. இதற்காக அவர் நீதி மன்றத்தை நாடமுடியும்” என தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



