யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சு
விவசாய சேவை நிலையங்களுக்கு போதியளவு யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சனசமூக நிலையங்களுக்கு 5,100 மெட்ரிக் தொன் மேலதிக யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 மெட்ரிக் தொன் யூரியா இன்று (19) விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை உர நிறுவனம் மற்றும் தனியார் உர கம்பனியின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு விவசாய சேவை நிலையத்திலும் யூரியா உரம் கிடைக்காத பட்சத்தில் கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரின் தொலைபேசி இலக்கமான 077 551 0674 மற்றும் இலங்கை உர நிறுவனத்தின் விநியோக முகாமையாளரின் தொலைபேசி இலக்கமான 077 444 1417 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
தீர்வுகளை பெறுவதற்கான நடவடிக்கை
இதேவேளை, சில விவசாய அமைப்புக்கள் யூரியா உரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன எனவும் இதனை கருத்திற் கொண்டு ஏதேனும் ஒரு பகுதியில் யூரியா உரம் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக தீர்வுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |