வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை
மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை (30.09.2024) அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டுமென உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த திகதிக்கு முன்னர் வரிகளை செலுத்த தவறுகையில் அவ்வாறான வரிகளுக்கு உள்நாட்டு இறைவரித் சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்களாக கடுமையான வரி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,
செலுத்த வேண்டிய வரி
'“எந்தவொரு வரிக்கும் ஒருவர் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாததால் நிலுவைத் தொகை இருந்தால், அதை வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும்.
திங்கட்கிழமைக்குப் பிறகும், நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை அறவிட உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
1944 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வருவாய் பிராந்திய அலுவலகத்தின் ஊடாகவோ இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
