அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை
தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர்.
அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.
டீசலின் விலை
எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மின்சார விலை திருத்தம்
இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
