பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றிக்கை
பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையிலே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகத்தின் ஒப்புதல்
அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
